தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

அண்ணாமலைப் பல்கலையில் 33 ஆயிரம் மாணவர்களுக்கு பாலின வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சுமார் 33 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கான பாலிய வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :26 மார்ச் 2014, 7:22 am

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சுமார் 33 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கான பாலிய வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் ஏற்படுத்தப்பட்ட பாலின வன்கொடுமைக்கு எதிரான புகார் குழு சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான பாலின வன்கொடுமை விழிப்புணர்வு பயிற்சி முகாம் கடந்த பிப்.5-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. பயிற்சியில் பல்கலையில் நடக்கும் பாலின வன்கொடுமைகள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பது குறித்தும், பாலின வன்கொடுமைகளை தடுப்பது குறித்தும், எவ்வாறு புகார் அளிப்பது குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு துறைவாரியாக பயிற்சி அளிக்கப்பட்டன.

பயிற்சி முகாம் நிறைவுவிழா பல்கலைக்கழக பொதுநூலக லிபரா ஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழகஅரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா பங்கேற்று நிறைவுரையாற்றினார். அவர் பேசுகையில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் புதிதாக சேரும்போது இந்த பயிற்சி தருவது அவசியமாகும். இதன் மூலம் வரும்முன் காப்பது மேல் என்பது அமலாக்கப்படும் என்றார். முகாமில் சிறப்பு பயிற்சி அளித்த வல்லுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஷிவ்தாஸ்மீனா வழங்கினார். விழாவில் வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில் இந்தியாவிலேயே இத்தகைய விழிப்புணர்வு பயிற்சி முகாம், முதன் முதலில் அண்ணாமலைப் பல்கலையில் சுமார் 33 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

விழாவில் பாலியல் வன்கொடுமை புகார் குழு தலைவி முனைவர் பி.மின்னல்கொடி, உறுப்பினர் முனைவர் எஸ்.பூங்கோதை, முனைவர் ஆறுமுகம் சகிலா, முனைவர் சி.சுப்ரமணியன், முனைவர் சில்வியா சாந்தகுமாரி, முனைவர் எம்.ஜெயக்குமரன், முனைவர் சி.எஸ்.ரத்தினசபாபதி, உதவிப்பதிவாளர் திலகம் ஆகியோர் பங்கேற்றனர். முனைவர் எம்.ஜெயக்குமரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.