தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ப.சிதம்பரம் வந்தால் செருப்பால் அடியுங்கள்: அதிமுக வேட்பாளர் பேச்சால் அதிர்ச்சி; புகார் மனு பதிவு

ப.சிதம்பரம் உங்கள் தொகுதிக்கு ஓட்டு கேட்டு வந்தால் அவரை செருப்பால் அடியுங்கள் என்று கூறிய அதிமுக வேட்பாளரால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இந்நிலையில், மானாமதுரை காவல் நிலையத்தில் அவருக்கு எதிரான புகார் மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2014, 10:03 am

யுகன்

ப.சிதம்பரம் உங்கள் தொகுதிக்கு ஓட்டு கேட்டு வந்தால் அவரை செருப்பால் அடியுங்கள் என்று கூறிய அதிமுக வேட்பாளரால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இந்நிலையில், மானாமதுரை காவல் நிலையத்தில் அவருக்கு எதிரான புகார் மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனாமதுரை அருகே உள்ள ஆனந்தச்சேரி என்ற இடத்தில் நேற்று மாலை நடந்த பிரசாரக் கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் செந்தில்நதன் வாக்கு கேட்டு பேசினார். அப்போது, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இனிமேல் உங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வந்தால், அவரை விளக்குமாற்றாலும் செருப்பாலும் அடியுங்கள் என்று பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸார் சிலர் திரண்டுள்ளனர். அப்போது, அந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் சமாதானப் படுத்தி திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், இன்று மதியம் காங்கிரஸார் திரண்டு வந்து, அதிமுக வேட்பாளரின் அநாகரிகப் பேச்சு குறித்து போலீஸாரிடம் மனு கொடுத்தனர்.

இதை ஏற்ற போலீஸார், தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.