குடும்ப தகராறில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள கம்பிளியம்பட்டியில் குடும்பத்தகராறில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீயைப் பற்ற வைத்து


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள கம்பிளியம்பட்டியில் குடும்பத்தகராறில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீயைப் பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது,.
மணப்பாறை வட்டம் புத்தாநத்தம் அருகேயுள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் முத்தழகன்(வயது 41), இவர் போர்வெல் வண்டியில் கூலித் தொழிலாளி. இவருக்கு மீனா (வயது28), என்ற மனைவியும், சரஸ்வதி(7), சத்யா(3), தனலெட்சுமி(1) உள்ளிட்ட 3 மகள்கள் உள்ளனர். முத்தழகன் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்று தங்கி வேலை பார்த்துவிட்டு பல நாள் கழித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் வியாழக்கிழமையன்று இரவு வழக்கம் போல் குடி போதையில் முத்தழகன் வீட்டுக்கு வந்து மனைவி மீனாவுடன் தகராறு செய்துள்ளார். விடிய விடிய தகராறு செய்ததால் மனமுடைந்த மீனா, விடியற்காலையில் கணவன் முத்தழகன் வெளியில் சென்றதை அறிந்து உடல் முழுவதும் சேலையை சுற்றிக் கொண்டு மண்ணெண்ணையை தன் தலையிலும், தன் குழந்தைகள் மீதும் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். தீ மளமளவென பரவியது. இதனால் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அனைத்து காப்பாற்ற முயன்றனர். இதில் தாய் மீனா மற்றும் அவரது மகள்கள் சரஸ்வதி. சத்யா ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொரு மகளான 1 வயதுடைய தனலெட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தனலெட்சுமி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த மணப்பாறை துணை கண்காணிப்பாளர் முத்தரசு வையம்பட்டி ஆய்வாளார் அப்துல் ரஹ்மான், புத்தாநத்தம் சிறப்பு உதவி ஆய்வாளார் கந்தசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மூவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். இச்சம்பவம் புத்தாநத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...