சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு சிதம்பரம் நகரமன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் சட்டப்பேரவைத்தொகுதி உதவித் தேர்தல் அதிகாரியும், சிதம்பரம் உதவி ஆட்சியருமான எம்.அரவிந்த் தலைமை வகித்து பயிற்சி வகுப்பை நடத்தினார். புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் அதிகாரியும், மாவட்ட வழங்கல் அலுவலருமான தங்கவேல், வட்டாட்சியர் எம்.விஜயா, தேர்தல் துணை வட்டாட்சியர் மு.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் 44 மண்டல தேர்தல் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து எப்படை பயிற்சி அளிப்பது என்றும், எலக்டிரானிக் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்தும், வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, தடையில்லா மின்சாரவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

