நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை, வீடியோ கண்காணிப்புக்குழு, நிலை கடுங்காணிப்புக்குழு

News image
Updated On :31 மார்ச் 2014, 12:26 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை, வீடியோ கண்காணிப்புக்குழு, நிலை கடுங்காணிப்புக்குழு அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரியுமான இ.சரவணவேல்ராஜ் தலைமை வகித்தார். தேர்தல் பார்வையாளர் கே.ஆர்.அபிஷேக் ஆனந்தராவ் (ஆந்திரா) முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் ஆணைய விதிமுறைக்குட்பட்டு வேட்பாளர்கள் செலவினங்களை கண்காணிப்பது, வீடியோ பதிவு செய்வது, வாகன தணிக்கை செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பசாமி, அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஅலுவலர் சடையப்பன் விநாயகமூர்த்தி, ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தாட்சாயிணி, உதவித் தேர்தல் அதிகாரிகள் சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.அரவிந்த் (சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி), கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேல் (புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி), கலால் உதவிஆணையர் கே.குழந்தைவேலு (காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதி), சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா மற்றும் வீடியோ கண்காணிப்புக்குழுவினர், பறக்கும்படையினர், நிலை கடுங்காணிப்புக்குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.