சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடும் வெய்யில் காரணமாக கிராமங்களில் உள்ள குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் வறண்டு போனது. இதனால் குடிநீரின்றி பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர். குடிநீரின்றி கால்நடைகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளன.
எனவே வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக அண்மையில் மேட்டூரிலிருந்து 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு கல்லணை, கீழணை வழியாக வீராணம்ஏரியில் நீர் நிரப்பட்டுவருகிறது. ஆனால் ஏரியை சுற்றியுள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள கிராமங்களில் வாய்க்கால்கள் மற்றும் குளங்கள் முற்றிலும் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குளிக்கவும், குடிக்கவும் நீரின்றி அவதியுற்றுள்ளனர். குறிப்பாக கால்நடைகள் குடிநீரின்ற கடும் அவதிக்குள்ளாகியுள்ளன. எனவே தமிழக முதல்வர் வீராணம்ஏரியிலிருந்தும், கீழணையிலிருந்து வடக்குராஜன் வாய்க்காலிலும் தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


