ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அண்ணாமலைப் பல்கலை. பிஇ., பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கான அனுமதி சேர்க்கை: மே.9-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே.9-ம் தேதி முதலும்,  பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேர மே.12-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

News image
Updated On :4 மே 2014, 8:06 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே.9-ம் தேதி முதலும்,  பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேர மே.12-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

மே.31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன்.2-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.800. எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.400 ஆகும். அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசு விதிமுறைகள் இடஒதுக்கீடு முறையில் நடைபெறும். விண்ணப்ப படிவங்கள் பல்கலைக்கழக கேஷ் கவுண்டர் மற்றும் அனைத்து தொலைதூரக்கல்வி மைய படிப்பு மையங்களிலும் கிடைக்கும். பிஇ மற்றும் பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் தனி, தனி விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். கவுன்சிலிங்கிற்கான தேதி பின்னர்  அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவர்கள் பொதுபிரிவினர் ரூ.850-ம் (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து), எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.450-ம் ( ரூ50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.