பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிக்கண்ணு மகன் கணேசன்(39). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். தற்போது பேன்சிகடை நடத்தி வரும் கணேசன் பைனான்ஸ் தொழிலும் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவி உள்ளார். இவர் அதிமுக வார்டு பிரதிநிதி ஆவார். ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் பழனியில் இருந்து பெரியாவுடையார் கோயில் செல்லும் வழியில் கழுத்தை அறுத்து கொலை செய்த நிலையில் கிடந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.