கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2 வது நாளாக திங்கள்கிழமையும் மழை பெய்து வருவதால், கத்திரி வெயிலின் தாக்கம் காணமல் போய் விட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக ஞாயி்ற்றுக்கிழமை காலையில் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழைப் பெய்தது. இதனால் கத்தரிவெயில் தொடக்க நாளில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
மதியத்துக்குப் பிறகு இரவு வரை லேசான குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை 5 மணியிலிருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழைப் பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து சிறிது நேர இடைவெளி விட்டு விட்டு காற்று வீசாமல், இடி, மின்னல் இல்லாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடி.யாமல் வீட்டிற்குள்ளேய முடங்கி கிடக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டர்): அண்ணாமலைநகர் 51, சிதம்பரம், கொத்தாவாச்சேரி 49, விருத்தாசலம் 48.30, காட்டுமன்னார்கோயில் 46, லால்பேட்டை 36, புவனகிரி 28, சேத்தியாத்தோப்பு 24.20, பரங்கிப்போட்டை 24, வானமாதேவி 21, கடலூர் 16.40, ஸ்ரீமுஷ்ணம் 15, பண்ருட்டி, மே.மாத்தூர் 2 என மாவட்டத்தில் மொத்தம் 411.90 மில்லி மீட்டர், சராசரியாக 19.61 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

