ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காட்டுமன்னார்கோயில் ஸ்ரீவீரநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், அறிவுக்கரசன், வை.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் பல்வேறு

News image
Updated On :6 மே 2014, 10:26 am

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், அறிவுக்கரசன், வை.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.  மே.9-ம் தேதி கருட சேவையும், 12-ம் தேதி திருக்கல்யாணம் மறறும் புஷ்பபல்லக்கு வீதிஉலா நிகழ்ச்சியும், 14-ம் தேதி திருத்தேர் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.  15-ம் தேதி கஜஅவரோஹனத்துடன் பிரம்மோற்சவ விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் பா.வேங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் என்.தோத்தாத்திரி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.