பழனியருகே பேன்சி கடைக்காரர் கொலை வழக்கில் பெண் உட்பட மூன்று பேர் கைது
பழனி அருகே பெரியாவுடையார் கோயில் செல்லும் வழியில் கோதைமங்கலம் நீரேற்ற மோட்டார் தொட்டி அருகே பழனி பழைய போஸ்டாபீஸ் ரோட்டை சேர்ந்த பேன்சி கடைக்காரர் கணேசன் என்பவர் கடந்த இரு


பழனி அருகே பேன்சி கடைக்காரர் கொலைவழக்கில் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவானார்.
பழனி அருகே பெரியாவுடையார் கோயில் செல்லும் வழியில் கோதைமங்கலம் நீரேற்ற மோட்டார் தொட்டி அருகே பழனி பழைய போஸ்டாபீஸ் ரோட்டை சேர்ந்த பேன்சி கடைக்காரர் கணேசன் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் மற்றும் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டதில் கொலை வழக்கில் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவானார்.
விசாரணையில், பழனி அருகே கரிக்காரன்புதூரை சேர்ந்தவர் பிச்சைத்தேவர் மகன் நல்லுசாமி(38). இவர் கஞ்சா வியாபாரி ஆவார். இவரது இரண்டாவது மனைவி மகாலட்சுமி(22). இவர் பழனி சத்யா நகரில் வசித்து வருகிறார். நல்லுசாமி அடிக்கடி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் பாரில் குடிப்பது வழக்கம். அப்போது அங்கு வந்த பேன்சி கடைக்காரர் கணேசனுக்கும் நல்லுசாமிக்கும் தகராறு ஏற்பட்டதில் நல்லுசாமியை கணேசன் தாக்கியுள்ளார். தொடர்ந்து நல்லுசாமியை கணேசன் கஞ்சா விற்பது குறித்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நல்லுசாமி மகாலட்சுமியிடம் விபரத்தை கூறி கணேசனின் செல்போனுக்கு பிரியா என்ற பெண் பெயரில் மிஸ்டுகால் பெண் போல பேசி பழக்கமுற செய்துள்ளார். பின் சம்பவ தினத்தன்று கணேசனை பெரியாவுடையார் கோயில் அருகே வருமாறு மகாலட்சுமியை வைத்து பேசியுள்ளார். இதை நம்பி கணேசன் சம்பவ இடத்துக்கு வந்த போது நல்லுசாமி தனது நண்பர்களான வண்டிவாய்க்காலை சேர்ந்த மணி மகன் கணேசன்(24), பழனி 13வது வார்டை சேர்ந்த வெள்ளைக்கண்ணு மகன் அய்யாவு(32) ஆகியோருடன் சேர்ந்து கத்தியால் குத்தியும், குரல்வளையை அறுத்தும் கொலை செய்துள்ளார். போலீஸார் விசாரணையில் சரவணணின் செல்போனில் பதிவான எண்கள் உள்ளிட்ட பல்வேறு குறுக்கு விசாரணையில் குற்றவாளிகளை பிடித்துள்ளனர். நல்லுசாமி, மகாலட்சுமி, குருசாமி சிக்கிய நிலையில் அய்யாவு தலைமறைவாக உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...