ஒநாய்கள் கடித்து 17 செம்மறி ஆடுகள் பலி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஆலம்பட்டி ஊராட்சி ஆதினிப்பட்டியை சார்ந்தவர் க.நல்லு(55). விவசாயியான இவர் 38 செம்மறி ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள களத்தில் கிடையில் அடைத்து


பொன்னமராவதி அருகே புதன்கிழமை ஒநாய்கள் கடித்து 17 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஆலம்பட்டி ஊராட்சி ஆதினிப்பட்டியை சார்ந்தவர் க.நல்லு(55). விவசாயியான இவர் 38 செம்மறி ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள களத்தில் கிடையில் அடைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்ததால் ஆடுகளை கிடையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை 4 மணியளவில் ஆடுகள் கத்தும் ஒசை கேட்டு அவர் ஆட்டுக்கிடைக்கு வந்த போது பல ஆடுகள் இறந்து கிடந்துள்ளன.
இதைக்கண்டு அதிர்ச்சியான நல்லு உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த இரண்டு ஒநாய்கள் ஒட்டம் பிடித்துள்ளன. கழுத்தில் இரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் 17 ஆடுகள் இறந்து கிடந்துள்ளன. 3 ஆடுகள் கழுத்தில் கடிபட்ட நிலையில் இருந்துள்ளது. தொடர்ந்து கால்நடை மருத்துவருக்கு அளித்த தகவலின்பேரில் கால்நடை மருத்துவரால் கடிபட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒநாய்கள் கடித்து ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...