சிதம்பரத்தில் 2வது நாளாக தொடர்மழை: மக்கள் மகிழ்ச்சி
சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து


சிதம்பரத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை நீக்கிய புதன்கிழமை பெய்த பலத்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியுற்றனர்.
சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 2 தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால், வெப்பம் குறைந்து, குளிர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுற்றனர். மழைவிபரம் வருமாறு: சிதம்பரம்- 89 மி.மீ, அண்ணாமலைநகர்-79 மி.மீ, பரங்கிப்பேட்டை- 78 மி.மீ, சேத்தியாத்தோப்பு- 48 மி.மீ, புவனகிரி- 65 மி.மீ, காட்டுமன்னார்கோயில்- 62 மி.மீ, லால்பேட்டை- 77 மி.மீ.
காட்டுமன்னார்கோயில் அருகே வீட்டு மேல்கூரை இடிந்து விழுந்தது: காட்டுமன்னார்கோயில் அருகே ம.உத்தமசோழகன் கிராமத்தில் தொடர் மழையில் புதிதாக கட்டப்பட்டுவரும் நிர்மலா என்பவரது வீட்டின் மேல்கூரை புதன்கிழமை உள்வாங்கியது. இதில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...