ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

முல்லைபெரியாறு அணை தீர்ப்பு: சிதம்பரத்தில் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பள்ளித்துள்ளதை அடுத்து சிதம்பரத்தில் அதிமுகவினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி

News image
Updated On :7 மே 2014, 10:22 am

ஜி.சுந்தரராஜன்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பள்ளித்துள்ளதை அடுத்து சிதம்பரத்தில் அதிமுகவினர் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து, தமிழகஅரசு தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்தி வந்த தலைமை நீதிபதி உட்பட 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு புதன்கிழமை வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால், அதன் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உத்தரவிட்டுள்ளது.

இதனை முன்னிட்டு சிதம்பரம் கீழரதவீதியில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் வெடி, வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சொ.ஜவகர், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், மணிவேல், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.