சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மே.11-ல் சிதம்பரம் திருப்பாற்கடல் உழவாரப்பணி

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தை இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் பொதுமக்களுடன் இணைந்து மே.11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணியில் ஈடுபட்டு தூர்வாரும் பணியை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 மே 2014, 6:52 am

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தை இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் பொதுமக்களுடன் இணைந்து மே.11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணியில் ஈடுபட்டு தூர்வாரும் பணியை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்து ஆலய பாதுகாப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கினமை நடைபெற்றது. தலைவர் மு.செங்குட்டுவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், ஆலோசகர் வி.சந்திரசேகரன், நாச்சியப்பன், வை.பசவராஜ், லஷ்மி, செல்வி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்: 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் திருப்பாற்கடல் குளத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு கொடுத்த உதவிஆட்சியர் எம்.அரவிந்த், டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, கடந்த 18-4-2014 முதல் பக்தர்கள் திருப்பாற்கடல் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட அனைத்து உழவாரப் பக்தர்களையும், பொதுமக்களை ஒருங்கிணைந்து வருகிற மே.11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கி உழவாரப்பணியை மேற்கொண்டு, குளத்தினை முற்றிலும் தூர்வாருவது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.