கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்தது இந் நிலையில் புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன்

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சுற்றுலாப் பயணிகள் சிரமம்

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்தது இந் நிலையில் புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஏரிச்சாலை,சீனிவாசபுரம், அப்சர்வேட்டரி,வில்பட்டி,நாயுடுபுரம்,புதுக்காடு,பெருமாள்மலை உள்ளிட்ட பல இடங்களில் மின் கம்பம் சேதமடைந்ததில் மின்தடை ஏற்பட்டதில் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அட்டுவம்பட்டிகிரஸ்,லாஸ்காட்சாலை,பி.டி.சாலை ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கிரஸ் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற வேண்டுமென அப் பகுதி மக்கள் வட்டாட்சியர் மாணிக்க கிருஷ்ணமூர்த்தியுடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனு கொடுத்தனர் இதனால் அப் பகுதியில் 3-மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தற்போது தேர்தல் விதமுறைகள் நடைமுறையில் இருப்பதால் தேர்வு முடிவுகள் வெளியானது பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பி.டி.சாலையில் உள்ள பழமையான மரம் விழுந்ததில் அருகே இருந்த நூலகக் கட்டிடத்திலும்,தனியார் கட்டடத்திலும் மரம் விழுந்தது இதில் கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டது நல்ல வேளையாக நூலகம் மற்றும் தனியார் கட்டத்தில் இருந்த 3-பெண்கள் உள்ளிட்ட 5-பேர் வெளியே வந்தனர் இதனால் எந்தவிதமான சேதங்கள் ஏற்படவில்லை.சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

லாஸ்காட்சாலையில் மரம் விழுந்ததில் கொடைக்கானல்-மதுரை சாலையில் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை ரேஞ்சர் சக்திவேல்,நெடுஞ்சாலைத்துறையினர்,மின்சாரத்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் மேலும் அப் பகுதியில் ஆபத்தாக இருந்த ஒரு சில மரங்கள் அகற்றப்பட்டது.கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சுற்றுலா இடங்களிலும் மலைச்சாலைகளிலும் மரங்கள் விழுந்தது இதனால் போக்குவரத்திற்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக கொய்யாப்பாறை,அடுக்கம்,பாலமலை,அட்டக்கடி உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர் நகர்ப் பகுதியில் பல மணிநேரம் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது தடை செய்யப்பட்ட இடங்களில் மின்சாரப் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com