ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி அருகே இடிதாக்கி இரண்டு பசுமாடுகள் பலி

பழனி அருகே கணக்கன்பட்டி பிரிவு ரூக்குவார்பட்டியை சேர்ந்தவர் நாட்டுத்துரை(42).  விவசாயியான இவர் தனது தோட்டத்து சாலையில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து வருகிறார்.  மாடுகளையும்,

News image
Updated On :11 மே 2014, 12:50 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே இடிதாக்கியதில் இரண்டு பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.

பழனி அருகே கணக்கன்பட்டி பிரிவு ரூக்குவார்பட்டியை சேர்ந்தவர் நாட்டுத்துரை(42).  விவசாயியான இவர் தனது தோட்டத்து சாலையில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து வருகிறார்.  மாடுகளையும், ஆடுகளையும் அவ்வப்போது மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கணக்கன்பட்டி மெயின்ரோடு பிரிவில் பாய் தோட்டத்தில் பனைமரத்தின் அடியில் இரண்டு பசுமாடுகளையும் கட்டி வைத்துள்ளார். 

பழனி மற்றும் சுற்றுபகுதியில் மாலை 3 மணிக்கு மேல் மழைபெய்வது போன்ற அறிகுறி இருந்த நிலையில் பலத்த காற்றால் மழை வராமல் ஏமாற்றியது.  ஆனால் அடிக்கடி இடி, மின்னல் தோன்றி மறைந்துள்ளது.  அப்போது நாட்டுத்துரை பசுமாடுகளை கட்டி வைத்திருந்த பனைமரத்தின் மீது சுமார் 3.15 மணியளவில் இடி தாக்கியுள்ளது.  இதில் மரத்தின் கீழே இருந்த இருமாடுகளையும் இடிதாக்கியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாடுகளும் பரிதாபமாக இறந்தன.  இவற்றின் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரமாகும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.