இதுகுறித்து பழனி வருவாய் துறையினருக்கும், பொதுப்பணித்துறைக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் பலமுறை புகார் வழங்கியும் கண்டு கொள்ளாத நிலை உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் நடைபெறும் மண்கடத்தலை கண்டித்து கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் ரோடு மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயி மாரிமுத்து என்பவர் கூறும்போது, மண் அள்ளுவதால் குளம் ஆழமாகிறது என பொதுப்பணித்துறை கூறிக்கொண்டு பல இடங்களிலும் ஆள்விழுங்கி பள்ளங்களை தோண்ட உதவியுள்ளனர். கடைக்கோடியில் தோண்டு பள்ளத்தால் குளத்தில் இருந்து செல்லும் தண்ணீர் கடைமடைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். முறையாக குறிப்பிட்ட அளவுக்கு குளம் முழுக்க சரிசமமாக தோண்டினால் பரவாயில்லை. மேலும், பல இலட்சம் மதிப்பிலான கரையை உடைத்து சேதம் செய்துள்ளனர்.