சிதம்பரம் தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா திருமாவளவன்
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தற்போது எம்பியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா? என கேள்வி எழுந்துள்ளது.


நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தற்போது எம்பியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா? என கேள்வி எழுந்துள்ளது.
கல்வி, பொருளாதார மற்றும் தொழில்துறையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கடலூர் மாவட்டம் விளங்குகிறது. விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இம்மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தனித் தொகுதியாக விளங்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் (தனி), அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குன்னம் ஆகியவை 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன.
இத்தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினரும், தலித் சமுதாயத்தினரும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இவையல்லாமல் இஸ்லாமியர்கள் கார்காத்த வேளாளர், முதலியார், செட்டியார், நாயுடு, பிராமனர், யாதவர்கள் ஆகியோர் வாழ்த்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் வாக்கு வங்கி தொகுதிகளாக இந்த தொகுதி விளங்குகிறது. நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சுதா மணிரத்தினமும், அதிமுக சார்பில் மா.சாந்திரகாசியும், காங்கிரஸ் சார்பில் டாக்டர் ப.வள்ளல்பெருமான் உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன்பு வரை அரசியல் கட்சிகள் களத்தில் பிரசாரத்தில் இருந்து வந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பான இரண்டு நாட்களில் கிராமப்புறங்களில் அரசியல் கட்சிகள் ஓரம்கட்டப்பட்டு, தலித் சமுதாயத்தினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும், பெரும்பான்மையான வன்னியர் சமுதாயத்தினர் பாமக வேட்பாளர் சுதாமணிரத்தினத்திற்கும் வாக்களித்துள்ளனர். மற்ற சமூகத்தினர், நடுநிலையாளர்கள் மற்றும் உணர்வுடன் உள்ள கட்சியினர் அந்தந்த கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளதாகவும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையோர் திருமாவளவனுக்கு வாக்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தேர்தலில் கடைசி் இருதினங்களில் தருமபுரி சம்பவம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காதல் கடத்தல் சம்பவங்களை கையிலெடுத்துக் கொண்டு, பெயர் குறிப்பிடாத துண்டுபிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு வன்னியர் சமுதாயத்தினர் மற்றும் இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வன்னியர் சமுதாய வாக்குகள் ஒருங்கிணைத்துள்ளனர். குறிப்பாக பல்வேறு பகுதிகளில் திமுகவில் உள்ள வன்னியர் சமுதாயத்தினர் பாமகவிற்கு வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது. அதேபோன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கிராமப்புறங்களில் தனது சமுதாய மக்களிடையே மந்தை பிரச்சாரம் மூலம் வாக்குகளை ஒருங்கிணைத்துள்ளனர். அனைத்து கட்சிகளில் உள்ள தலித் சமுதாயத்தினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வாக்களித்ததாக தெரிகிறது. இதனால் அனைத்து கிராமப்புறங்களில் ஜாதி ரீதியான தேர்தலாக மாறியது.
இந்த தேர்தலில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இத்தொகுதியில் தனித்து போட்டியிட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். கூட்டணி தர்மத்தின்படி பார்த்தால் திமுக கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவன்தான் வெற்றி பெற வேண்டும் எனக்கூறுகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். அப்படி அவர் தோல்வியுற்றால், திமுகவினர் சரியாக பணியாற்றவில்லை, வாக்களிக்கவில்லை என்பது நிருபணமாகிவிடும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். எனவே கூட்டணி தர்மத்திற்கு வெற்றியா? சாதியத்திற்கு வெற்றியா? ஆளுங்கட்சிக்கு வெற்றியா என்பது மே.16 நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...