ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியில் சித்ராபவுர்ணமி வெள்ளித்தேரோட்டம்

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு புதன்கிழமை வெள்ளித்தேரோட்டம்  விமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :15 மே 2014, 1:58 am

என்.​ அங்​கு​பாபு

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு புதன்கிழமை வெள்ளித்தேரோட்டம்  விமரிசையாக நடைபெற்றது.

     பழனியில் புதன்கிழமை சித்ராபவுர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இரவு அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதராய் முத்துக்குமாரசாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோயிலுக்கு எழுந்தருளிய பின் வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. 

அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் தம்பதி சமேதராக சுவாமி ஏற்றம் செய்யப்பட்டார்.  பின்னர் தேர் நான்குரத வீதிகளில் தேர் உலா வந்து நிலையை அடைந்ததும் பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டு கைதட்டி மகிழ்ந்தனர். 

நிகழ்ச்சியில் பழனிக்கோவில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, பேஷ்கார் ராமலிங்கம், மணியம் சேகர், காண்ட்ராக்டர் நேரு, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.