கடலூர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் எ.அருண்மொழித்தேவன் 10,980 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிக்குட்பட்ட கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடலூர் பெரியார் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடந்து வெள்ளிக்கிழமை(மே16) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கடலூர் தொகுதியில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 460 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 22 ஆயிரத்து 146 பெண் வாக்காளர்களும் 38 இதரர்களும் சேர்த்து மொத்தம் 12 லட்சத்து 47 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 889 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 96 ஆயிரத்து 523 பெண் வாக்காளர்களும் 3 இதரர்களும் சேர்த்து வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 83 ஆயிரத்து 415 ஆகும். வாக்கு பதிவு சதவீதம் 78.82 ஆகும்.
முதல் சுற்று முடிவில் பெற்ற வாக்குகள் விவரம்: எ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 23,463, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1109, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)103, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)12,483, கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 501, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6781, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 64, சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 25, ச.ஆனந்தராஜன் 74, எஸ்.கிரிஜா 30, தி.சிவஞானசம்பந்தன் 78, ரா.செங்குட்டுவன்43, திருநாவுக்கரசு100, பாஸ்கர் 50, ராதாகிருஷ்ணன் 83, ராஜ்குமார் 423, ஜெயசங்கர் 353, நோட்டா 293
முதல் சுற்றில் மொத்தம் 46,056 வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன். திமுக வேட்பாளர் நந்தகோபாலகிருஷ்ணனை காட்டிலும் 10980 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

