மயிலாடுதுறை தொகுதி: தபால் வாக்குகளிலும் அதிமுக முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 2,631 வாக்குகள் பதிவாகின. இதில், 349 தபால் வாக்குகளின் மேல் உறையில், தொடர்புடைய வாக்காளர்கள் கையொப்பமிடாததால், அந்த வாக்குகளை ஏற்பது குறித்து சர்ச்சை


மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தபால் வாக்குகளிலும் அதிமுக முன்னிலைப் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 2,631 வாக்குகள் பதிவாகின. இதில், 349 தபால் வாக்குகளின் மேல் உறையில், தொடர்புடைய வாக்காளர்கள் கையொப்பமிடாததால், அந்த வாக்குகளை ஏற்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டது.
இதனால், தபால் வாக்குகளின் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழை பிற்பகல் நேரத்திலேயே தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் :
மொத்தம் பதிவான வாக்குகள் - 2,631. செல்லாத வாக்குகள்- 349. நோட்டா- 29.
ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 973, மணிசங்கர் அய்யர்- 173, கே. ராசவேலு (பிஎஸ்பி)- 2, க. அகோரம் (பாமக)- 468, வி. இருளப்பன் (சமாஜ்வாதி)- 1, செ. ஹைதர் அலி (மமக)- 627, என். குணசேகரன் (சிபிஎம்எல்-சுயே)- 5, ஆர். திருநாவுக்கரசு (சுயே)- 1, டி. மோத்தேயூ (சுயே)- 1, ஏ. ரேவதி (சுயே)- 2.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...