47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மயிலாடுதுறை தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

News image
Updated On :16 மே 2014, 7:45 am

சங்கர்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தபால் வாக்குகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. பதிவாகியிருந்த 2,637 தபால் வாக்குகளில், சுமார் 400-க்கும் மேற்பட்ட வாக்குகளில், வாக்குப் பதிவு தபாலின் மேல் உறைகளில் வாக்காளரின் கையொப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.

கையொப்பம் இல்லாத வாக்குகளை நிராகரிக்க வேண்டும் என ஒரு சில அரசியல் கட்சிகளும், அந்த வாக்குகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என சில அரசியல் கட்சிகளும் கருத்துத் தெரிவித்தன.  இதனால், தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு ஒத்திவைக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.