மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் வெற்றி
மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 1,582 வாக்குச்


மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 2,76,943 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.
மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 1,582 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.மொத்தம் 13,49,796 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், 75.87 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இத்தொகுதியில் 19 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன், மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ. ஹைதர் அலி, பாமக வேட்பாளர் க. அகோரம், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மணிசங்கர் அய்யர் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்பட்டனர்.21 சுற்றுகளாக நடைபெற்ற இத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் முன்னிலைப் பெற்றிருந்தார்.
வாக்கு எண்ணிக்கையின் நிறைவில், அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியைவிட 2,76,943 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் (தபால் வாக்குகள் உள்பட) :
ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக) - 5,13,494. செ. ஹைதர் அலி (மமக) - 2,36,551, க. அகோரம் (பாமக) - 1,43,932, மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) - 58,452. கே. ராசவேலு (பிஎஸ்பி)- 3,654, வி. இருளப்பன் (சமாஜ்வாதி)- 2,640.
சுயேட்சைகள் : சி. ஆறுமுகம்- 2,026, என். குணசேகரன்- 4,144, எம். சம்சுதீன்- 2,302, ஆர். திருநாவுக்கரசு- 4,711, டி. திமோத்தேயூ- 2,325, எம். நாகராஜன்- 1,066, ஆர். பாண்டியன்- 11,607, ஆர். பாத்திமா- 7,579, வி. முத்துசாமி- 1,994, ஏ. ரகுராமன்- 7,209, அ. ரேவதி- 6,283, என். ஜெரீனாபேகம்- 1,056, பி. ஜெயப்பிரகாஷ்- 770.
5-ம் இடம் பெற்ற நோட்டா
முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்த நிலையில், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை பதிவு செய்த நோட்டாவுக்கு 29 தபால் வாக்குகள் உள்பட 13,172 வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம், அதிக வாக்குகள் பெற்ற வரிசையில் 5-மிடம் பெறுகிறது நோட்டா.
17 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
இத்தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலி தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் வைப்புத் தொகையை இழந்துள்ளனர். வைப்புத் தொகை இழந்தவர்களில், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், பாமக வேட்பாளர் க. அகோரம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...