உடலில் தீப்பற்றி வாலிபர் பலி
பழனி அருகே அமரபூண்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(22). இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து


பழனி அருகே உடலில் தீப்பற்றி வாலிபர் இறந்து போனார்.
பழனி அருகே அமரபூண்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(22). இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக விளக்கு தட்டி கீழே விழுந்து அதில் இருந்த மண்ணெண்ணெய் மணிகண்டன் மீது சிதறி பலத்த தீக்காயமடைந்தார். உடனடியாக அவரை அவரது மனைவி வளர்மதி(21) போக்குவண்டி மூலம் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்கு மதுரை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்து போனார்.
இதுகுறித்து வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...