/

சிதம்பரத்தில் 116 தெரு நாய்களுக்கு தடுப்பூசி!

விழல்கட்டி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அவதார் பிராணிகள் நல அமைப்பு அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு பிராணிகள் நல அமைப்பு தலைவர் சி.எஸ்.பாலசுந்தரம்

News image
Updated On :19 மே 2014, 12:33 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மற்றும் அவதார் பிரணிகள் நல அமைப்பும் இணைந்து தெரு நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

விழல்கட்டி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அவதார் பிராணிகள் நல அமைப்பு அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு பிராணிகள் நல அமைப்பு தலைவர் சி.எஸ்.பாலசுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.சண்முகம், வழக்குரைஞர் பி.முகுந்தணன், துணைச் செயலர் செல்வி சூரியநாராயணன், பேராசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிதம்பரம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் எம்.எம்.அர்ச்சுணன் முகாமை தொடங்கி வைத்தார். விழாவில் இணைப் பேராசிரியர் டி.எஸ்.எஸ்.ஞானக்குமார், பொறியியல்துறை மாணவர்கள் கே.மாங்குடி, ஜெ.ரகோத்தமன், வி.வெள்ளைராஜா, வி.பொன்மயில் மற்றும் மண்ணை சிவா, சி.எஸ்.அண்ணாமலரை, எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கே.சக்திவேல் நன்றி கூறினார்.

நகரில் உள்ள பல்வேறு தெருக்களில் திரிந்து கொண்டிருந்த நாய்களை பிடித்து தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் எம்.கணேசன், பூங்குழலி ஆகியோர் 116 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.