எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நரேந்திரமோடி அரசின் மூலம் காவிரிப் பிரச்னை தீர்வதற்கு வாய்ப்பு :பாஜக தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் தகவல்

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான  அரசு அமைவதால் கர்நாடகம், தமிழகம், புதுவை இடையே நிலவும் காவிரிப் பிரச்னை தீர்வுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளதாக பாஜக தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.காரைக்காலில் அவர் திங்கள்கிழமை இன்று கூறியது:

News image
Updated On :19 மே 2014, 8:14 am

செல்வ முத்துகுமாரசாமி

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான  அரசு அமைவதால் கர்நாடகம், தமிழகம், புதுவை இடையே நிலவும் காவிரிப் பிரச்னை தீர்வுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளதாக பாஜக தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

காரைக்காலில் அவர் திங்கள்கிழமை இன்று கூறியது:

கடந்த 10 ஆண்டுகளாக மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் இருந்ததால் விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படவில்லை. பலவீனமான அரசின் மூலம் எத்தனையோ பிரச்னைகள் தீர்வு ஏற்படாமல் போய்விட்டது. மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் மத்தியில் ஆட்சியில் அமரவுள்ளது பாஜக. பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திரமோடி தீர்க்கமான முடிவுகளையும், பிரச்னைகளை தீர்க்கவேண்டிய நடவடிக்கைகளை கையாளும் திறமை பெற்றவர்.

ஒவ்வொரு ஆண்டும் காவிரித் தண்ணீர் பிரச்னை ஏற்படுகிறது. மத்தியில் அமையும் புதிய அரசு மூலம் இப்பிரச்னை தீர்வதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

புதுவை அரசைப் பொருத்தவரை காவிரித் தண்ணீரை தமிழகத்திலிருந்தே பெறவேண்டும். காவிரித் தண்ணீரை நம்பியே காரைக்கால் பகுதி உள்ளது. எனவே காரைக்காலுக்குரிய தண்ணீரை பெறுவதற்கு அண்டை மாநில அரசுகளை அணுகும் ஆயத்தப் பணிகளை உடனடியாக புதுவை அரசு தொடங்கப்படவேண்டும்.

காரைக்காலில் தற்போது கோடை உழவுப் பணிகளை செய்ய வேளாண் துறை விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு உதவக்கூடிய வகையில் டிராக்டர், புழுதிக் களைப்பை போன்ற சாதனங்கள் உழவர் உதவியகம், பசுமைப்படை, கிராம கூட்டுறவு சங்கங்களிடம் இல்லை. உடனடியாக இதனை தயார் படுத்த வேண்டும்.

காரைக்கால் பகுதியில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்கின்றனர். அண்மையில் பெய்த மழை இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்கள் பருத்தி விவசாயிகளை அணுகி உரிய ஆலோசனைகளை வழங்கவேண்டும். சம்பா பணிகளை தொடங்குவதற்கு முன்பு, புதுச்சேரி அரசின் வேளாண்துறையானது தரமான விதை, உரம் உள்ளிட்ட இடுபொருள்களை தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்தியில் அமையும் அரசு, வேளாண்மைக்கு முக்கியத்துவம் தருமென்பதால் புதுச்சேரி அரசு மத்திய அரசை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.