எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுவையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது.காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பி்ல் மாவட்ட ஆட்சியரகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்ட செயலர் அ.வின்சென்ட் தலைமை வகித்துப் பேசியது :

News image
Updated On :19 மே 2014, 7:17 am

செல்வ முத்துகுமாரசாமி

புதுவையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது.

காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பி்ல் மாவட்ட ஆட்சியரகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்ட செயலர் அ.வின்சென்ட் தலைமை வகித்துப் பேசியது :

புதுவையில் ஏப்ரல் மாதம் முன் தேதியிட்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே புதுவையில் மின் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளபோது, மீண்டும் உயர்த்தப்பட்டது புதுவை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. மின்சார இணை ஒழுங்கு முறை ஆணையம்தான் உயர்த்தியது என புதுவை அரசு பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறது. ஆணையம் கட்டணத்தை உயர்த்த நினைக்கும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் தவறிவிட்டது.

புதுவை மாநிலம் முழுவதும் தொழில்சாலைகள் மின்சாரத்தை திருடுகிறது. ஆண்டுக்கு ரூ.350 கோடி வரை மின் திருட்டால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.  இதுகுறித்து புகார் அளித்தால் மின் துறையினர் நடவடிக்கை எடுப்பது இல்லை. மின் துறையின் பறக்கும் படையினர் ஓரிண்டு இடத்தில் நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதித்தால், எம்.எல்.ஏ.க்கள் தலையீட்டால் தண்டனை ரத்து செய்யப்பட்டுவிடுகிறது.

ஆனால் சாதாரண குடும்பஸ்தர்கள் உபயோகிக்கும் மின்சாரத்தின் மீதான கட்டணத்தை ஓரிரு மாதம் கட்டத் தவறினால், மின் துண்டிப்பு நடவடிக்கையில் மின் துறை ஈடுபடுகிறது. புதுச்சேரி ஆட்சியாளர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதால், மின்துறையினர் பாரபட்சம் தொடர்கிறது.

மின் கட்டணம் உயர்வென்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இதனை புதுச்சேரி அரசு வாபஸ் பெறுவதற்கு உரிய நடவடிக்கையை உடனடியாக தொடங்கவேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் என்.எம்.கலியபெருமாள், ஏ.எஸ்.ரவி, என்.ராமர், எஸ்.ராஜசேகரன், எஸ்.தமீம், என்.பிச்சையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.