பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாகர்கோவில்-கச்சிகுடா சிறப்பு ரயிலுக்கு நெல்லையில் வரவேற்பு

நாகர்கோவிலில் இருந்து மதுரை, சேலம், காட்பாடி வழியாக ஆந்திர மாநிலம் கச்சிகுடாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி,

News image
Updated On :20 மே 2014, 9:29 am

ஷேக் அப்துல்காதர்

நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயிலுக்கு செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து மதுரை, சேலம், காட்பாடி வழியாக ஆந்திர மாநிலம் கச்சிகுடாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருப்பதி, கடப்பா வழியாக கச்சிகுடாவுக்கு செல்கிறது.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.இதேபோல் ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 4 மணிக்கு கச்சிகுடாவில் புறப்படும் ரயில் அடுத்த நாள் வியாழக்கிழமை இரவு 9.10 மணிக்கு நாகர்கோவில் வந்தடைகிறது.

1595 கி.மீ தொலைவுள்ள வழிதடத்தில் இந்த ரயில் 29.10 மணி நேரத்தில் செல்கிறது. செவ்வாய்க்கிழமை நாகர்கோவிலில் இருந்து இயக்கி வைக்கப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலுக்கு தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் நிர்வாகி சந்திரமெளலி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நிலைய மேலாளர் வி.எம். செல்லத்துரை மற்றும் ரயில்வே பணியாளர்கள், பயணிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.