பழனியருகே மூக்கு வெட்டப்பட்டு ஒருவர் கொலை: 4 பேர் கைது
பழனி அருகே சிந்தலவாடம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகன் பூபதி(44). இவருடைய நண்பர் காளிபட்டியை சேர்ந்த செல்லமுத்து மகன் கணேசன்(33). இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை


பழனி அருகே மூக்கு வெட்டப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தலைமறைவாகினர்.
பழனி அருகே சிந்தலவாடம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகன் பூபதி(44). இவருடைய நண்பர் காளிபட்டியை சேர்ந்த செல்லமுத்து மகன் கணேசன்(33). இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை சத்திரப்பட்டிக்கு டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பூபதி, கணேசன் இருவரும் மாட்டுப்பாதை பிரிவு அருகே வந்த போது கணேசன் நண்பர்களை அழைத்து வந்து மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது பூபதி கணேசனை கத்தியால் குத்தியுள்ளார். இதைப் பார்த்த கணேசனின் மைத்துனர் மோகன்பிரபு கத்தியை பிடுங்கி பூபதியை தாக்க முயன்ற போது மூக்கு வெட்டப்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக இருவரையும் அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி கோவைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிய போது வழியிலேயே பூபதி இறந்து போனார்.கணேசன் பலத்த காயத்துடன் கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மகன் ஞானசேகர்(29), சின்னு மகன் பெருமாள்(42), அங்குச்சாமி மகன் முத்துச்சாமி(36), காளிபட்டி கருப்புச்சாமி மகன் சுப்ரமணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைறைவாக உள்ள காளிபட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மோகன்பிரபு(35), ஆறுமுகம் மகன் மணிகண்டன்(32) ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...