மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சமத்துவபுரம் அருகில் ஆற்றில் மறைத்து வைத்திருந்த, ரூ 10 மதிப்புள்ள எரிசாராயத்தையும், அதை வைத்திருந்த பெண் உட்பட ஒருவரையும் செவ்வாய்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு சூனாம்பேடு போலீஸார் கைது செய்தனர்.
அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் எரிசாராயம் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்பி ராஜேந்திரன் உத்திரவின்படி, சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் திருநாவுகரசு, துரைசாமி மற்றும் தனிபடை போலீசார்கள் சக்ரபாணி, சீனுவாசன் ஆகியோர், பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆத்தூர் சமத்துவபுர ஆற்றில், எரிசாராயம் மறைத்து இருப்பதாக தகவல் வரவே, அங்கு சென்று சோதனை செய்ததில், 35லிட்டர் கொள்ளளவு கொண்ட 110 பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் இருந்ததை கண்டறிந்தனர். இவற்றின் மதிப்பு ரூ 10 இலட்சம். இதனை வெளியூர்களில் விற்க வைத்திருந்த ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த வரதப்பகவுண்டர் மகன் துரை (வயது 65), அவரது மருமகள் வளர்மதி (வயது 30), ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான துரை என்பவரின் மகன் முரளி என்கிற சத்தீஷ் (வயது 34) போலீஸாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சூனாம்பேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

