நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜல்லிக்கட்டு தடை எதிர்த்து அவனியாபுரத்தில் காளைகள் கொம்புகளில் கறுப்புக் கொடி ஏற்றி ஊர்வலம்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும் மறுபரிசீலனை செய்யக் கோரியும் மதுரை அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக் காளைகள் கொம்புகளில் கறுப்புக் கொடி ஏற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது.

News image
Updated On :22 மே 2014, 5:15 am

மது

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும் மறுபரிசீலனை செய்யக் கோரியும் மதுரை அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக் காளைகள் கொம்புகளில் கறுப்புக் கொடி ஏற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது.

தமிழக பாரம்பரிய விளையாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி 50க்கும் மேற்பட்ட காளைகள் கொம்புகளில் கறுப்புக் கொடி கட்டி ஊர்வலம் நடத்தப் படுவதுடன் அவனியாபுரத்தில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப் பட்டு வருகிறது.

தமிழக பாரம்பரிய விளையாட்டான ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை ஆகியவற்றை நிரந்தரமாக நடத்த சட்டம் கொண்டு வரவேண்டும்; இந்திய பிராணிகள் நல வாரியத்தில் தமிழக பாரம்பரிய விளையாட்டைத் தெரிந்த உறுப்பினர் ஒருவர் இடம்பெறவேண்டும்; ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மறுசீராய்வு தீர்மானம் போட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல் ஆகிய தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.