பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கார் பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணை ஜூன் 1 ல் திறப்பு: பாபநாசம் அணை திறக்க வலியுறுத்தல்

கார் பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் பெருங்கால் பாசனத்தில் 2,700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தாமிரவருணி பாசன செயற்பொறியாளர் ம. முத்துபாண்டியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :27 மே 2014, 8:23 am

ஷேக் அப்துல்காதர்

கார் பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் பெருங்கால் பாசனத்தில் 2,700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தாமிரவருணி பாசன செயற்பொறியாளர் ம. முத்துபாண்டியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தாமிரவருணி வடிநில பாசனத்தில் கார் மற்றும் பிசான பருவம் ஆகிய இரு பருவம் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை கார் பருவமும், நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை பிசான பருவ சாகுபடியும் மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பாபநாசம் அணையில் 11 கால்வாய்கள் மூலம் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மணிமுத்தாறு அணையில் பிரதான கால்வாய் மூலம் 25,434 ஏக்கர் நிலங்களும், பெருங்கால் மதகு மூலம் 2,700 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகிறது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு அதிகமாக இருந்தால்தான் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் முதல், 2 மற்றும் 3,4 ஆவது ரீச் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட முடியும். பெருங்கால் பாசனத்திற்கு 40 அடிக்கு அதிகமாக நீர் இருப்பு இருந்தால் திறக்கப்படும்.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 67.59 அடியாக இருந்தது. அணைக்கு 3 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் பெருங்கால் மூலம் பாசனம்

பெறும் நிலங்களுக்கு ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, தெற்குபாப்பான்குளம், தெற்குகல்லிடைக்குறிச்சி, பொட்டல் பகுதியில் 2,700 நிலங்கள் பாசனம்

பெறுகிறது.

அதிகாரி தகவல்:

தாமிரவருணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ம. முத்துபாண்டியன் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகு மூலம் பாசனம் பெறும் 2,700 ஏக்கர் நிலங்களுக்கு ஜூன் மாதம் முதல் தேதியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்தால்தான் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இம்மாத இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்வரத்தை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்றார் அவர்.

அணைகளின் நீர்இருப்பு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 163.77 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 204.75 கனஅடி திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 64.86 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 57.65 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 63.50 அடியாகவும் இருந்தது.

விவசாயிகள் கோரிக்கை: பாபநாசம் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் முதல் தேதியில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த சமயத்திலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. ஆகவே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.