ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழநி வைகாசி விசாகம்.ஜூன் 5ல் கொடியேற்றம்

பழநியில் தைப்பூசம், பங்குனி உத்திரவிழாவை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான ‘வைகாசி விசாகத் திருவிழா’ ஜூன் 5 முதல் 14 வரை, நடக்கிறது.

News image
Updated On :28 மே 2014, 1:18 pm

என்.​ அங்​கு​பாபு

பழநியில் தைப்பூசம், பங்குனி உத்திரவிழாவை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான ‘வைகாசி விசாகத் திருவிழா’ ஜூன் 5 முதல் 14 வரை, நடக்கிறது.

 பழநி வைகாசிவிசாகத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூன் 5ல், காலை 8.30 மணிக்குமேல் 9.30 மணிக்குள் கொடியேற்றத்துடன், துவங்கி தொடர்ந்து பத்துநாட்கள் நடக்கிறது. விழாவின், ஆறாம் நாளான ஜூன் 10ல், மாலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குகள், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழா நாட்களில் சுவாமி தங்க மயில், வெள்ளி காமதேனு, தங்ககுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஏழாம்நாள் ஜூன் 11ல், வைகாசி விசாகத்தன்று, மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4 மணி திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயில் தேர்நிலையிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பாடாகி, நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.