தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் பணத்தை சுரண்டும் அரசு மதுக்கடைகளை வரைவில் மூடுவேன் என தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர்

News image
Updated On :29 மே 2014, 2:35 pm

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் பணத்தை சுரண்டும் அரசு மதுக்கடைகளை வரைவில் மூடுவேன் என தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் தருமபுரி தொகுதியில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

இதையடுத்து, தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

இதில், வியாழக்கிழமை தருமபுரி ஒன்றியத்துக்குள்பட்ட ஏமகுட்டியூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து பேசியது: மக்களவை தேர்தலில் பணபலம், அதிகார பலத்தால் திராவிடக் கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், பணத்தை பெரிதாக நினைக்காமல், முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த தொகுதி மக்கள் பாமகவுக்கு வாக்களித்து என்னை வெற்றிப்பெற செய்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தருமபுரி மாவட்டத்தில் வேலை வாய்பை பெருக்கி தொழில்சாலைகள் தொடங்கிட நடவடிக்கை எடுப்பேன்.

தருமபுரி மாவட்டத்தில் ஓராண்டில் ரூ.1900 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இந்த பணம் மதுவுக்கு செலவளிக்காமல் இருந்திருந்தால் மக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.

எனவே, மக்கள் நலன் கருதி மாவட்டத்திலுள்ள மதுக்கடைகளை பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி மூடுவேன் என்றார் அவர்.

நிகழ்ச்சியி.ல் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.சரவணன், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.