ஒகேனக்கலில் அடித்து செல்லப்பட்ட மாணவர் சடலம் மீட்பு
கோவை கணபதி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரூபன். இவரது மகன் ஐசக் நியூட்டன் (13). இவர் கோவையிலுள்ள ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்தார். இந்த நிலையில், ரூபன், அவரது குடும்பத்தினர்,


தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கோவை கணபதி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரூபன். இவரது மகன் ஐசக் நியூட்டன் (13). இவர் கோவையிலுள்ள ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்தார். இந்த நிலையில், ரூபன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வியாழக்கிழமை ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா வந்தனர்.இதில், பிரதான நீர்வீழ்ச்சியில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரூபனின் மகன் ஐசக் நியூட்டன் நீர்வீழ்ச்சியில் உள்ள தடுப்புக் கம்பி அருகில் குளித்துக் கொண்டிருந்தார். இதில், திடீரென ஐசக் நியூட்டன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இது குறித்த தகவலின் பேரில், போலீஸார், தீயணைப்பு, மீட்புத் துறையினர், பரிசல் ஓட்டிகள் ஆகியோர் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் ஐசக் நியூட்டனை தேடி வந்தனர்.இந்த நிலையில், அருவியில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் உடல் நீர்வீழ்ச்சியில் சற்றுத் தொலைவில் அத்திமரத்துப்பள்ளம் என்ற இடத்திலிருந்து மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் மாணவர் சடலத்தை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவ செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...