சிதம்பரம் அருகே கடலில் குளித்த இரு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி சாவு
சிதம்பரம் அண்ணாமலைநகர் அருகே உள்ள கோவிந்தசாமிநகரைச் சேர்ந்த ரிஷிகேஷ் (16), ஓமக்குளம் புறவழிச்சாலையைச் சேர்ந்த ரஞ்சித் (16), லால்கான்தெருவைச் சேர்ந்த கிஷோர்குமார் (16),


சிதம்பரம் அருகே கடலில் குளித்த பள்ளி மாணவர்கள் கடல் அலையில் சிக்கி இரு பள்ளி மாணவர்கள் இறந்தனர். 2 மாணவர்கள் தப்பி கரையேறினர்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் அருகே உள்ள கோவிந்தசாமிநகரைச் சேர்ந்த ரிஷிகேஷ் (16), ஓமக்குளம் புறவழிச்சாலையைச் சேர்ந்த ரஞ்சித் (16), லால்கான்தெருவைச் சேர்ந்த கிஷோர்குமார் (16), சோமசுந்தரமுதலியார் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (16) ஆகிய நால்வரும் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை மேற்கண்ட நால்வரும் இரு மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அருகே கடலூர் மற்றும் நாகை மாவட்ட எல்லையில் உள்ள கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.
வியாழக்கிழமை பெளர்ணமியை முன்னிட்டு கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் கடல் அலை சீற்றத்தில், கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்களுக்கு அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதில் நீச்சல் தெரியாததால் ரிஷிகேஷ், ரஞ்சித் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். கிஷோர்குமார், விக்னேஷ் ஆகிய இருவரை நீந்தி தப்பி வந்து கரையேறினர். தகவல் அறிந்த மீனவர்கள் மீன்வலைகளை போட்டு இருவரை உடலை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்டம் புதுப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...