யூரியா உரம் பற்றாக்குறை வரவால் விவசாயிகளுக்கு வழங்குவதில் சிக்கல்
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்துள்ள பருவமழையால் குளங்கள், அணைகள் நிரம்பி விவசாயத்துக்கு ஏற்ற சூழல் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்கள் வயல்களில் உழுது


பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கூட்டுறவு வேளாண் சங்கங்களுக்கு வந்துள்ள யூரியா உரம் பற்றாக்குறையாக இருப்பதால் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்துள்ள பருவமழையால் குளங்கள், அணைகள் நிரம்பி விவசாயத்துக்கு ஏற்ற சூழல் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்கள் வயல்களில் உழுது பணிகளை துவக்கி உள்ளனர். இந்நிலையில் அடியுரமாக விளங்கும் யூரியாவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கொடுத்த புகார்மனுவைத் தொடர்ந்து கடைகளில் உரங்களை பதுக்கி வைத்து விற்கக்கூடாது என்றும், அதிக விலைக்கு விற்கக்கூடாது என்றும் உத்திரவிட்டுள்ளார். ஆனால் வேளாண்துறையினர் இதுகுறித்து கண்துடைப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் விவசாயிகள் அவர்கள் ஊரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு நிலையங்களை நாடி வருகின்றனர்.
தற்போது கூட்டுறவு வேளாண்மை சங்கங்களுக்கு மிக குறைந்த அளவிலேயே யூரியா மூட்டைகள் வந்துள்ளது. பழனியை அடுத்த அமரபூண்டியில் உள்ள மேலக்கோட்டை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழமை யூரியா உரம் வழங்கும் நிகழ்ச்சியின் போது விவசாயிகள் முற்றுகையிட்டதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அமரபூண்டியில் சுமார் 200 ரேசன்கார்டுகள் உள்ள நிலையில் விவசாயிகள் சுமார் 100 பேரே உள்ளனர். கார்டுக்கு யூரியா மூட்டை வழங்கப்படும் என தெரிவித்த நிலையில் வேளாண் சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கார்டுக்கு யூரியா வழங்கினால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சங்கத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு ஒரு மூட்டை வழங்க உத்திரவிடப்பட்டது.
பழனி பிசிஎம்எஸ் வேளாண் சங்கத்தில் 200 மூட்டை வந்த நிலையில் காலையிலேயே சுமார் 100 மூட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஒருவருக்கு மூன்று மூட்டை வீதம் சிட்டா, அடங்கல் பெறப்பட்டு வழங்கப்பட்டது. இங்கும் பிரச்னை ஏற்படவே மதியத்துக்கு மேல் யூரியா மூட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது. விவசாயிகளில் குறுவிவசாயிகள், பெரிய விவசாயிகள் என உள்ளனர். ஒரு மூட்டை யூரியா என்பது மிக குறைவான அளவாகும். இதை வயலுக்கு பரவ முடியாது. ஆகவே, கடைகளையே மீண்டும் விவசாயிகள் நாடவேண்டியுள்ளது. ஆகவே, இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும், வேளாண்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவது தவிர்க்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...