ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காங்கிரஸ் கட்சியில் மக்கள் நலனை விட சொத்துப்பிரச்னைக்கான அடிதடியே அதிகம்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாரதம் தாண்டி தனது ஆட்சியையும், தமிழையும் பரப்பிய சக்ரவர்த்தி ராஜேந்திரசோழனின் புகழைக் கொண்டாடும் விதமாக, தேசிய சித்தாந்தத்தை பரப்ப ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நடத்திய பேரணிக்கு

News image
Updated On :10 நவம்பர் 2014, 11:07 am

என்.​ அங்​கு​பாபு

தமிழக காங்கிரஸ் கட்சியினர் மக்கள் நலனை விட சொத்துப்பிரச்னைக்கே அதிகமாக அடிதடியில் ஈடுபடுகின்றனர் என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் திருமலைசாமி இல்லத் திருமண விழாவிற்கு வந்த தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பாரதம் தாண்டி தனது ஆட்சியையும், தமிழையும் பரப்பிய சக்ரவர்த்தி ராஜேந்திரசோழனின் புகழைக் கொண்டாடும் விதமாக, தேசிய சித்தாந்தத்தை பரப்ப ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நடத்திய பேரணிக்கு நீதிமன்றமே அனுமதி வழங்கியும் அதை அவமதிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை 36 இடங்களில் சுமார் 40 ஆயிரம் பேர் தமிழக அரசின் உத்திரவால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுஅ சம்பாவிதம் கூட ஏற்படாத நிலையில் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தேசிய சிந்தனையை பரப்ப ஒரு ஊர்வலம் நடத்தக்கூட அனுமதி வழங்க முடியாத அளவிற்கு அனைத்தும் அரசியலாக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக தமிழக அரசு முடங்கிப்போய் இருக்கிறது. எதுதவறு, எதுசரி என்று ஆராய்ந்து பார்க்க கூட முடியாத அளவில் உள்ள தமிழக அரசை பாஜக குற்றம் சாட்டுகிறது. 

தேசிய சித்தாந்தத்தை பரப்ப முடியாத அளவிற்கு நாடு உள்ள நிலையில் சென்னையில் அடுக்கு மாடிக்கட்டிடத்தில் நாட்டுவெடிகள், அரைகுறையான நிலையில் வெடிகுண்டுகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசியல் கொலைகள் அரங்கேறி வருகிறது. ரவுடிகள் அதிகரித்து வருகின்றனர்.  சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருக்கிறது. சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் அதை பார்க்காமல் வேறு எதையோ பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.  மத்திய அரசு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க எல்லா முயற்சிகளும் மேற்கொண்டுள்ளது. அங்கு தூதரை அனுப்பி உறவினர்களுடன் பேச வைத்துள்ளது. 

இந்நிலையில் சுதர்சன நாச்சியப்பன் போன்றவர்கள் தமிழக அரசை பாராட்டியுள்ளார். உள்நோக்கத்தோடு இவர்கள் பாராட்டி வருவது இவர்கள் எல்லாம் மத்திய அரசில் பத்து வருடங்கள் இருந்தார்களா என்பதே தெரியவில்லை. இப்போது இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர்கள் பிரச்னையிலோ குறித்து பேசும் சகோதரர் வாசன் பத்து ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார். 2011ல் இவர்கள் ஆட்சியில்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.  ஆனால் 2014ல் பாஜக அரசு அவர்களை மீட்க அனைத்து சட்டரீதியான முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது.  இதை மூடிமறைக்கும் விதமாக இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சகோதரர் இளங்கோவன் கூறுகிறார், மோடி அரசு ராஜபட்ஷேவை ஆட்சியில் இருந்து தூக்க வேண்டுமாம்.  இது எப்படி முடியும்.  கடந்த ஆட்சிகாலத்தில் இதை அவர்கள் செய்திருக்கலாம் அல்லவா? அதே போல காங்கிரஸ் ஆட்சி செய்யும் கேரள மாநில அரசிடம் சென்று பாம்பாறு பிரச்னையில் தமிழகத்தில் 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாதிக்கும், குடிநீர் தட்டுப்பாடு வரும் என கூறி தடுத்து நிறுத்தலாம் அல்லவா?  பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் தேசிய கட்சியில் இருந்தால் தேசிய பிரச்னை பேசுவார்கள். அதுவே மாநில கட்சியாக மாறும்போது மாநிலப் பிரச்னை பற்றி பேசுகிறார்கள்.  இவர்கள் இருக்கும் கட்சியை சார்ந்தே பிரச்சினையும் இருக்கும்.

இலங்கை பிரச்னையில் காங்கிரஸ், பாஜக இரண்டின் அணுகுமுறையும ஒன்றே என்பது தவறு.  பாஜக ராஜ்ஜிய ரீதியாக இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தை கொடுத்து வருகிறது.  ராஜபட்சேவின் அணுகுமுறை தவறு என்பதை நாங்களே ஒப்புக்கொள்கிறோம்.  பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.  நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாரதீய ஜனதா கட்சி உருவெடுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் மக்கள் பிரச்னையை விட சொத்துப் பிரச்னை, அலுவலகத்தை யார் கைப்பற்றுவது, யார் படத்து அகற்றுவது என்ற பிரச்னையையே அதிகமாக சந்தித்து வருகின்றனர். தமிழக மக்கள் மீது அக்கறை கிடையாது.  அதனால்தான் கமலாலயம் நோக்கி தினமும் இலட்சக்கணக்கான இளைஞர்களும், இளைஞிகளும் சாரை, சாரையாக படையெடுத்து வருகின்றனர். 

பாரத அளவில் 18002662020 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால் உடனடியாக கட்சியின் உறுப்பினராக பாரதீய ஜனதா ஏற்பாடு செய்துள்ளது. ஒருகோடி உறுப்பினர் சேர்ப்போம், தமிழகத்தில் மோடி ஆட்சி அமைப்போம் என்ற தீவிர முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். கறுப்புப்பணத்தை மீட்போம் என்று ஆரம்பம் முதலே சொல்லி வருகிறோம்.  அதை உறுதியாக செயல்படுத்துவோம். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் பாரத பிரதமரான மன்மோகன்சிங்கிடம் 2ஜி அலைக்கற்றை பிரச்னை வந்த போதே நீங்கள் தட்டிக்கேட்டிருக்க வேண்டும் என்றால் இதில் பிரதமருக்கும் சம்பந்தம் இருக்கலாம். இதை கவனிக்க வேண்டும்.  காங்கிரஸ், திமுக, அதிமுக அனைத்து கட்சிகள் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளது.  பாஜகவில் அது இல்லை.  அதனால்தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் வாக்குசதத்தை அதிகரித்துள்ளோம். தமிழகத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது.  இதை காவல்துறையே ஒப்புக்கொண்டுள்ளது.  காவல்துறை இறப்புகள், தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் வேற்றுமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து வேலை செய்யும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றை புதிய காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். 

தமிழக முதலமைச்சர் தெரியாத்தனமாக அந்த பதவியை ஆக்கிரமித்து விட்டார்.  ஆனால் இன்றுவரை தைரியமாக செயல்படவில்லை.  முதல்வர் படப்பிரச்னை குறித்து சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்ய வேண்டும்.  தமிழக அரசும், தனியார் பால் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பால்விலையை உயர்த்தி வருகின்றனர்.  மக்கள் முதுகில் விழும் இச்சுமையை யார் சரி செய்வார்கள். சத்தான பாலுக்கு மக்கள் எங்கே போவார்கள். ஆவினில் நடைபெற்ற ஊழல்கள் மறைக்கப்படுகிறது. உண்மையை வெளிக்கொணர அரசு மறுக்கிறது.  ஊழலை மறைக்கவே பால்விலையை ஏற்றுகின்றனர்.  அதற்காகவே நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.  அதே நேரம் விவசாயிகளான பால் உற்பத்தியாளர்களுக்கும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.  தமிழகத்தின் ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில்வே முனையமாக மாற்ற பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.  இதற்காக இருமுறை தமிழகம் வந்த மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் மக்களிடையே கொண்டு செல்லவும், அதை தெரியப்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.