பழனி பகுதி அணைகள் உலகவங்கி மற்றும் அணை பாதுகாப்பு குழு அதிகாரிகளால் ஆய்வு
பழனியை சுற்றியுள்ள அணைகளில் தற்போது நீர் நிறைந்துள்ள நிலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் உலக வங்கி மற்றும் அணை பாதுகாப்பு


பழனியை சுற்றியுள்ள அணைகளில் தற்போது நீர் நிறைந்துள்ள நிலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் உலக வங்கி மற்றும் அணை பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பழனியை சுற்றிலும் பாலாறு, பொருந்தலாறு அணைகள், வரமாநதி அணைக்கட்டு, குதிரையாறு அணை, பரப்பலாறு அணை போன்றவை உள்ளன. சமீபத்திய மழையால் இந்த அணைகள் தற்போது நிரம்பி கடல்போல காட்சியளிக்கிறது. ஆனால் அணைகளில் பல இடங்களிலும் தடுப்புச்சுவர் உடைந்தும், நீர் வடியும் பகுதிகளில் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. ஷட்டர்களிலும் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வருகிறது. தவிர, அணைகளில் பூங்காக்கள் முற்றிலும் பராமரிப்பின்றி உள்ளது.
இதுகுறித்து விவசாயிகளும், தன்னார்வ அமைப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில் அணைகளின் பராமரிப்பு குறித்தும், அணைகளை பலப்படுத்தி பாதுகாப்பது குறித்தும் டெல்லியில் இருந்து உலக வங்கி அதிகாரிகள் வினோத்குமார் சர்மா, சந்திரசேகரமாத்தூர் மற்றும் அணை பாதுகாப்பு அதிகாரிகள் பிரசாத், ராஜசேகர் உள்ளிட்டோர் பழனியை சுற்றியுள்ள அணைகளை ஆய்வு செய்தனர். ஆய்வுகள் முடித்த அதிகாரிகள் தெரிவித்ததாவது, பழனியை சுற்றியுள்ள அணைகளை ஆய்வு செய்த வகையில் அணைகளை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளும் விதத்தில் சுமார் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் வரும் ஜனவரி மாதத்துக்கு மேல் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
பாலாறு பொருந்தலாறு அணைக்கு ரூ.2 கோடியிலும், பரப்பலாறு அணைக்கு ரூ.20 கோடி மதிப்பிலும், குதிரையாறு அணைக்கு ரூ. ஒரு கோடி மதிப்பிலும், குடகனாறு அணைக்கு ரூ.3.8 கோடி மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வின் போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயப்பிரகாஷ், செயற்பொறியாளர் திருச்செந்தில்வேலன், உதவி செயற்பொறியாளர் முருகன், உதவிப்பொறியாளர் வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...