எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்காலில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்காலில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :19 நவம்பர் 2014, 8:23 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால் தேனூர் அரசு உயர் நிலைப்பள்ளி, மற்றும் திருநல்லாறு அரசு உயர் நிலைப் பள்ளி, தந்தைப் பெரியாறு அரசு மேல் நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு வெடி குண்டு வைக்கப்போவதாக கடிதம் எழுதி காரில் சென்ற மர்ம நபர்கள் பள்ளி மாணவர் ஒருவரிடம் கொடுத்து  சென்றுள்ளனர். அந்த பள்ளி மாணவர் தேனூர் அரசு உயர் நிலைப் பள்ளி துணை முதல்வர் ரஞ்சித் சுந்தரிடம் கொடுத்தார்.

கடிதத்தை பிரித்து படித்த துணை முதல்வர் தகவல் அறிந்ததும் காரைக்கால் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பழனி வேலு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அந்த கடிதத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.