மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம்: புதிய தமிழகம் கட்சி முடிவு

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கே.

News image
Updated On :23 நவம்பர் 2014, 1:55 pm

முத்துகுமார்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கிராமத் தலைவர்கள், புதிய தமிழகம் நிர்வாகிகள் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது:

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களில் தேவேந்திரகுல வேளாளர், நாடார் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த 66-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் மற்றும் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தீர்மானங்கள்:

தென்தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெற்ற தொடர் படுகொலை சம்பந்தமாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசைக் கோருவது.1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை பட்டியலின பிரிவினர் தெரிந்து கொள்ளும் வகையில் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம், துண்டுப்பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது.வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார்களை அளிக்கவும், அளிக்கப்பட்ட புகார்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒன்றியம் வாரியாக ஒரு சிறப்பு வழக்குரைஞர் குழு அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர் செல்லப்பா உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.