6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை

பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தைச் சேர்ந்த முருகையா மகன் ஆறுமுகநயினார் (27). கூலித்தொழிலாளி. பஞ்சர் ஓட்டும் தொழிலும் செய்துவந்தார். இவருக்கு மாடத்தி என்ற மனைவியும்,

News image
Updated On :24 நவம்பர் 2014, 9:29 am

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தைச் சேர்ந்த முருகையா மகன் ஆறுமுகநயினார் (27). கூலித்தொழிலாளி. பஞ்சர் ஓட்டும் தொழிலும் செய்துவந்தார். இவருக்கு மாடத்தி என்ற மனைவியும், நாகலட்சுமி என்ற குழந்தையும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆறுமுகநயினார் வீடுதிரும்பவில்லையாம். அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடினர்.

திங்கள்கிழமை அதிகாலையில் மேலப்பாட்டத்தில் உள்ள கால்வாய்க்கரையோரம் ஆறுமுகநயினார், பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவர் (பொ) சுமித்சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன்நாயர் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மேலப்பாட்டத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த கொலைகளுக்கு பழிக்குப்பழியாக ஆறுமுகநயினார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இவ் வழக்கு தொடர்பாக மேலப்பாட்டத்தைச் சேர்ந்த தர்மராஜ் மகன் சுரேஷ் (24), தேவேந்திரன் மகன் பொன்முத்துராஜா (23), பழனி மகன் கருத்தப்பாண்டி (29) ஆகியோர் ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

மேலும் சிலரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.