ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி பேருந்து நிலையம் அருகே பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு

பழனி விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையம் எதிரே பைபாஸ் குளத்தின் இறுதியில் பழைய துணிகள் விற்கும் கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை

News image
Updated On :25 நவம்பர் 2014, 2:41 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி பேருந்து நிலையம் அருகே இன்று சுமார் ஐந்தடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை நிறைந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது.

பழனி விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையம் எதிரே பைபாஸ் குளத்தின் இறுதியில் பழைய துணிகள் விற்கும் கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்ட அப்பகுதியினர் பழனி தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் வந்த அலுவலர்கள் பாம்பை லாவகமாக பிடித்தனர்.  பிடிபட்ட பாம்பு சுமார் ஐந்தடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஆகும்.  சுமார் ஐந்து கிலோ எடை கொண்ட இந்த பாம்பு கொடிய விஷத்தன்மை நிறைந்ததாகும்.  பிடிபட்ட பாம்பை தீயணைப்புப்படையினர் பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் சண்முகநதி அருகே புதர்கள் அடர்ந்த பகுதியில் உயிருடன் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.