தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

திருமண ஆசை காட்டி தன்னை சீரழித்ததாக வாலிபர் மீது இளம்பெண் புகார்

திருமண ஆசை காட்டி தன்னை சீரழித்ததாக கூறி கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பத்தை சேர்ந்த தமிழ்செல்வி(22) என்ற பெண் அதே பகுதியை சேர்ந்த முதுநிலை பட்டதாரி மாணவர் பிரபுதாஸ் என்கிற

Updated On :26 நவம்பர் 2014, 11:53 am

திருமண ஆசை காட்டி தன்னை சீரழித்ததாக கூறி கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பத்தை சேர்ந்த தமிழ்செல்வி(22) என்ற பெண் அதே பகுதியை சேர்ந்த முதுநிலை பட்டதாரி மாணவர் பிரபுதாஸ் என்கிற தினகரன்(28) என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் கும்மிடிப்பூண்டியில் ஒரு மருத்துமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவரின் மகனான முதுநிலை பட்டதாரி பிரபுதாஸ் என்கிற தினகரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவு கொண்டதாகவும் இது குறித்து பிரபுதாஸின் குடும்பத்தாரின் தெரிவித்த போது அவர்கள் 50 பவுன் நகை, 1 லட்சம் வரதட்சணை தந்தால் திருமணம் செய்து வைப்பதாக கூறினார்கள் என இவர் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகாபாய்  பிரபுதாஸை கைது செய்து விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து பிரபுதாஸ்  நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.