திமுக-வின் 14ஆவது அமைப்புத் தேர்தலின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாநகரில் உள்ள 4 பகுதி கழகங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக-வில் உள்கட்சி தேர்தல் அனைத்து நிலைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் பல்வேறு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.மாநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி எல்லைக்குள்பட்ட மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தச்சநல்லூர் ஆகிய 4 பகுதி கழகங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கைலாசபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு பகுதிக்கும் தலா ஒரு அவைத் தலைவர், செயலர், பொருளாளர் மற்றும் 3துணைச் செயலர்கள், 5 பிரதிநிதிகள் என மொத்தம் 11 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 4 பகுதி கழகங்களுக்கு 44 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த 44 பதவிகளுக்கும் போட்டியிட விருப்பமுள்ள கட்சி உறுப்பினர்களிடம் இருந்து இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.தலைமைக் கழகத்தில் இருந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சதாசிவம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் வேட்பு மனுக்களைப் பெற்றனர். காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை மனுத்தாக்கல் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

