தோஷம் கழிப்பதாகக் கூறி 8 பவுன் நகை திருட்டு
திருவண்ணாமலை, கொசமடத் தெருவைச் சேர்ந்தவர் தனியார் கல்லூரிப் பேராசிரியர் ராகவன் (29). இவரது தாய் விருதம்மாள் (58). இவர், சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது, அங்கு வந்த


திருவண்ணாமலையில் தோஷம் கழிப்பதாகக் கூறி, மூதாட்டியை ஏமாற்றி பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை, கொசமடத் தெருவைச் சேர்ந்தவர் தனியார் கல்லூரிப் பேராசிரியர் ராகவன் (29). இவரது தாய் விருதம்மாள் (58). இவர், சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது, அங்கு வந்த 2 பெண்கள், நாங்கள் ஜோதிடர்கள். உங்கள் வீட்டில் தோஷம் இருக்கிறது. தோஷத்தை நிவர்த்தி செய்தால் உங்கள் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்று கூறினராம்.
இதையடுத்து, 2 பெண்களையும் விருதம்மாள் வீட்டுக்குள் அழைத்துச் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம். பல்வேறு பரிகாரங்களைச் சொல்லிய 2 பெண்களும் தட்சணை கொடுங்கள். நாங்கள் செல்கிறோம் என்று கூறினராம்.எனவே, பீரோவைத் திறந்து பணத்தை எடுக்க விருதம்மாள் முயன்றுள்ளார். அப்போது, எங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம். ஒரு கைப்பிடி அரிசி கொடுங்கள். அதுவே போதும் என்றனராம். இதையடுத்து, பீரோவை சரியாக மூடாமல் விட்டுவிட்டு விருதம்மாள் சென்று அரிசி எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
2 பெண்களும் சென்றபிறகு பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை எடுக்கச் சென்றபோது, நகைகள் காணாதது கண்டு விருதம்மாள் திடுக்கிட்டுள்ளார். அப்போதுதான், 2 பெண்களும் சேர்ந்து 8 பவுன் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...