ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவினர் மனித சங்கிலி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அதிமுக சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கடுமையான வெயிலில்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அதிமுக சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கடுமையான வெயிலில் சுமார் 3 மணி நேரத்திற்கு 3 கி.மீ. தூரத்திற்கு ஏராளமான அதிமுக.வினர் மனித சங்கிலி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அதிமுக சார்பில் அதன் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் மற்றும் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி ஆகியோர் தலைமையில் தினமும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு இருந்து நான்கு திசைகளிலும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஜெயலலிதா விடுதலை கோரி மனித சங்கிலி மற்றும் கண்ட ஆர்ப்பாட்டத்தை நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் மற்றும் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி ஆகியோர் தலைமையில் நடத்தினர்.
இதில் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, மாவட்ட அம்மா பேரவை அவைத் தலைவர் மல்லி துரைப்பாண்டியன், மகளிர் அணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம், நகர்மன்ற துணைத் தலைவி சரோஜா நடராஜன், நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலாளர்கள் எம்.ஜெகதீசன், எஸ்.பி.திலகராஜன், அ.மங்களசாமி, தொகுதிச் செயலாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சிந்து முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் அ.மகேஸ்வரன், டி.வி.கே.கந்தசாமி முன்னாள் நகரச் செயலாளர் பி.கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் மூன்று கி.மீ. தூரத்திற்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் நான்கு திசைகளிலிலும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...