மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரம் விநாயகர் கோயிலில் 1008 தேங்காய் உடைத்து பிரார்த்தனை!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோயிலில் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில்

News image
Updated On :7 அக்டோபர் 2014, 9:37 am

ஜி.சுந்தரராஜன்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோயிலில் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் 1008 தேங்காய் உடைத்தும், சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தும் பிராத்தனை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் நகரச் செயலாளர் கே.கலியபெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பாச.மில்லர், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், நகர இளைஞரணி செயலாளர் ராஜா, நகரமன்ற உறுப்பினர் நடனசபாபதி தீட்சிதர், சிவராமதீட்சிதர், எம்.ஜி.பாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.