ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நந்தனார் குருபூஜை அன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை

நந்தனார் குருபூஜையை முன்னிட்டு அன்றைய தினம் மதுக்கடைகளை மூட வேண்டும் என நந்தனார் ஆய்வு மைய அமைப்பாளர் ரா.காவியச்செல்வன், சிதம்பரம் உதவிஆட்சிரியடம் கோரிக்கை விடுத்து கடிதம் கொடுத்துள்ளார்.

News image
Updated On :10 அக்டோபர் 2014, 1:43 pm

ஜி.சுந்தரராஜன்

நந்தனார் குருபூஜையை முன்னிட்டு அன்றைய தினம் மதுக்கடைகளை மூட வேண்டும் என நந்தனார் ஆய்வு மைய அமைப்பாளர் ரா.காவியச்செல்வன், சிதம்பரம் உதவிஆட்சிரியடம் கோரிக்கை விடுத்து கடிதம் கொடுத்துள்ளார்.

கடித விவரம்:

தமிழகத்தின் வடமாவட்டங்களில் சாதிய இழிவு, தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், சமூகநீதியை நிலை நாட்ட ஆலய நுழைவு போராட்டத்தின் வழி நின்று அடக்குமுறையை வென்றெடுத்த உரிமை மீட்பு போராளியாக திகழ்ந்தவரும், நாயன்மார்களில் ஒருவரானவர் நந்தனார்.  தமிழக சைவ வரலாற்றில் சைவ நெறிமுறை பின்பற்றியும் பரப்புரை செய்தவருமான திருநாளைப் போவார் என்ற பெயர் பெற்றவர் நந்தனார். இவரது குருபூஜை வருகிற அக்.12-ம் தேதி சிதம்பரத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. காந்தி, வள்ளலார் போன்ற மகான்கள் பிறந்த தினத்தில் மதுபானக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளிப்பது போல், நந்தனார் குருபூஜை அன்று  அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கடிதத்தில் ரா.காவியச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.